‘ஜோடி நம்பர்–1’ டி.வி. நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சியாகும் இதையும் திறமையாக நடத்தினார். பல்வேறு விழாக்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்தார். இவரை அனைவரும் டி.டி. என்றும் செல்லமாக அழைத்தனர்.
திவ்யதர்ஷினிக்கும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நிச்சயமானது. இருவரும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்து பிறகு காதலர்களாக மாறினர். திவ்யதர்ஷினியின் திருமணம் அரும்பாக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடந்தது.
இருவீட்டு குடும்பத்தாரும் இதில் கலந்து கொண்டனர். டி.வி. நடிகர்–நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பலர் நேரில் வந்து வாழ்த்தினார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 6–ந்தேதி வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.