சூர்யா முதன் முறையாக திரைப்படத்திற்காக பாடகராக சூர்யா முதன் முறையாக திரைப்படத்திற்காக பாடகராக

சிங்கம்-2 படத்திற்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருவது நமக்கு தெரியும்.

இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. முதல் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக இதில் சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், துப்பாகி பட வில்லன் வித்யூத் ஜம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் அஞ்சான் படத்திற்காக சூர்யா முதன் முறையாக பாடல் ஒன்றை பாடியிருக்கிறாராம். ஏற்கெனவே சூர்யாவிற்கு விளம்பரப்பாடலை பாடிய அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவத்தை வைத்து நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்.

சூர்யா, திரைப்படத்திற்காக பாடுவது இதுவே முதல் முறை. இதனிடையே வரும் ஜூலை 17ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமான வகையில் ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஆசிரியர்