September 21, 2023 12:07 pm

கிஷோர் மீண்டும் கதாநாயகனாக காதலி காணவில்லை படத்தில்கிஷோர் மீண்டும் கதாநாயகனாக காதலி காணவில்லை படத்தில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொல்லாதவன்’, ‘ஜெயம் கொண்டான்’, ‘ஆடுகளம்’, ‘வெண்ணிலா கபடி குழு’ போன்ற படங்களில் நடித்தவர் கிஷோர். இவருடைய நடிப்பில் வெளியான ‘ஹரிதாஸ்’ படம் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது மீண்டும் கதாநாயகனாக ‘காதலி காணவில்லை’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹார்த்திகா ஷெட்டி நடிக்கிறார். படத்தில் காமெடி அரசியல்வாதி வேடத்தில் பட அதிபர் ஜி.ஆர் நடிக்கிறார். மேலும் பத்மாவசந்தி, சோப்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ஜி.ஆர் வழங்க ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.பி.பூரணி, சுவாமிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை தயாள் ஒஷா கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இரட்டையர்களான ரவி-ராஜா இயக்குகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் கூடுகிற மார்கெட் பகுதியில் கிஷோர், வில்லன்களுடன் மோதும் அதிபயங்கரமான சண்டைக் காட்சியை அதிக ரிஸ்க் எடுத்து படமாக்கியுள்ளார்கள். இப்படத்தில் வில்லன் வேடத்தில் சோப்ராஜும் அவருடன் அடியாளாக வேலை செய்யும் வேடத்தில் கிஷோர் நடிக்கிறார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்