பிரபல டி .வி அறிவிப்பாளர் மா.கா.பா ஆனந்த் கதாநாயகனாகிறார்பிரபல டி .வி அறிவிப்பாளர் மா.கா.பா ஆனந்த் கதாநாயகனாகிறார்

‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ்பாண்டியன்’ ஆகிய படங்களில் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய பாஸ்கர், ‘அட்டி’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடிக்கிறார். சுந்தர்.சி.பாபு இசையமைக்கிறார். வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஈ-5 என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜெயகிருஷ்ணன் மற்றும் இமாஜினரி மிஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குனர் கூறும்போது, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் தண்ணீர் சப்ளை செய்யும் கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் நண்பர்கள் பற்றிய கதை. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்னை வருகிறது. அந்த பிரச்னையை சாதுர்யமாக எப்படி சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சித்தரிக்கும் பொழுதுபோக்கு திரைப்படம் என்றார்.

ஆசிரியர்