March 20, 2023 11:06 pm

“நூறாவது நாள்” படத்தை புது வடிவில் இயக்கவுள்ளார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன்“நூறாவது நாள்” படத்தை புது வடிவில் இயக்கவுள்ளார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சத்யராஜ் நடிப்பில் 1984-ம் வருடம் வெளியான சூப்பர் ஹிட் படம் நூறாவது நாள். இப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சத்யராஜ் மொட்டை அடித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் விஜயகாந்த், நளினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் சத்யராஜின் வில்லன் தோற்றம் அதிகம் பேசப்பட்டது.

தற்போது இப்படத்தை புது வடிவில் இயக்கவுள்ளார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன். இப்படத்தை எ.டி.எம். புரொடக்‌ஷன் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்