ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம்
“இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம்பாலா.
இதில் ஊர்வசி, அக்ஷரா கௌடா, மயில்சாமி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இடியட் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அரசியலை பங்கமாக கலாய்ப்பது போன்று இடம் பெற்றிருக்கும் இந்த ஸ்னீக் பீக் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
சினி மலர்