December 2, 2023 3:24 pm

ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கைக்கு ராஷ்மிகாவின் பதில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ஐஸ்வர்யா

’புஷ்பா’ திரைப்படத்தில் நாயகி ஆக ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த நிலையில் இந்த கேரக்டரில் நான் நடித்திருந்தால் நன்றாக நடித்திருப்பேன் என்ற ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி அளித்திருந்தார்.

இந்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்தார். ராஷ்மிகா மந்தனாவை எந்த வகையிலும் தான் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் அவரது உழைப்பு கடினமானது என்றும் நான் கரக்டரை பற்றி கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த கருத்துக்கு ராஷ்மிகா மந்தனாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதையடுத்து தற்போது ராஷ்மிகா தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியுள்ளார். அதில், ‘இப்போதுதான் நான் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கையை பார்த்தேன். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். மேலும் இதனை நீங்கள் விளக்க வேண்டிய காரணமும் இல்லை என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு தெரியும், உங்கள் மீது நான் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். உங்களுடைய ’ஃபர்கானா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்