ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இருக்கிறது, தக் லைஃப். மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில், பல ஆண்டுகள் கழித்து உருவாகியிருக்கும் இந்த படத்தை பார்க்க பலர் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ-புக்கிங் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
தக் லைஃப் திரைப்படம்:
சிம்பு-கமல் முதல் முறையாக இணைந்திருப்பது, கமல்-மணிரத்னமின் வெற்றிக்கூட்டணி, பல நாட்கள் கழித்து ஒரு கல்ட்-கேங்ஸ்டர் படம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்று படத்தின் ஹைலைட்டை கூட்டும் அம்சங்கள் பல இருக்கின்றன.
ப்ரீ-புக்கிங் வசூல்..
தக் லைஃப் திரைப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ப்ரீ-புக்கிங் ஆரம்பித்தது. பான்-இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாவதை ஒட்டி, இப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. ஜுன் 4ஆம் தேதியான இன்று வரை, தக் லைஃப் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் சுமார் ரூ.10 கோடியை தாண்டியிருக்கிறது. இதுவரை சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ப்ரீ புக்கிங் வசூல், விரைவில் சுமார் ரூ.15-17 கோடி வரையிலான வசூலை தாண்டும் என்று கூறப்படுகிறது. முதல் நாளில் மட்டும், இப்படம் ரூ.20 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழி சர்ச்சை..
கமல்ஹாசன், எழுதி, இயக்கி அல்லது தயாரித்து நடிக்கும் படங்கள் பெரும்பாலானவை சர்ச்சையில் சிக்கியிருக்கின்றன. ஹேராம் படத்தில் ஆரம்பித்து, விருமாண்டி, வஸ்வரூபம் என்று எந்த படத்தையும் இந்த சர்சசை விட்டுவைக்கவில்லை. தக் லைஃப் படத்திற்கு அது போல, மொழி பிரச்சனை எழுந்திருக்கிறது.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது” என்று கேஷுவலாக ஒரு வாக்கியத்தை கூறிவிட்டார். இது, கன்னடர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக நீதிமன்றம் ஆகியவை “கமல் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்திய நிலையிலும், “என் கூற்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” என்று கமல் கூறினாரே தவிர, மன்னிப்பு கேட்கவில்லை. இறுதியில், திட்டமிட்டது போல ஜூன் 5ஆம் தேதி கர்நாடகாவில் மட்டும் படம் ரிலீஸாகாது என்று கூறிவிட்டார்.
கர்நாடகாவில் ரிலீஸ் இல்லை..
கர்நாடாக நீதிமன்றம், கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறியதை அடுத்து, கமலே படத்தை ரிலீஸ் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்து விட்டார். இது தக் லைஃப் படத்தின் வசூலை ஓரளவிற்கு பாதித்தாலும், அதனை ஈடு செய்ய கமல் வேறு ஏதேனும் முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : zeenews.india.com