செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு சூரி நடிக்கும் ‘ மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சூரி நடிக்கும் ‘ மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

1 minutes read

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பிலிருந்து விலகி… கதையின் நாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து கதையின் நாயகனாக அழுத்தமான வேடங்களில் நடித்து வரும் நடிகர் சூரி நடிப்பில் தயாராகி வரும் ‘மண்டாடி ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி , சுகாஷ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்தரா விஜய் , மிதுன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கடல் பின்னணியில் மீனவர்கள் பங்கு பற்றும் பிரத்யேக நீர் நிலை சார்ந்த பாய்மர படகு போட்டியை மையப்படுத்தி கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்ற நிலையில்.. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கி இருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சூரி நடிப்பில் தயாராகும் ‘மண்டாடி’ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிறது என்பதும் இந்த திரைப்படம் ஒரே தருணத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.