இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) உயிரிழந்ததாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம் பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த Radio Caroline வானொலி நிலையம், கணினி கோளாறு காரணமாக இந்தத் தவறான அறிவிப்பு வெளியானதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த வானொலி நிலையத்தின் நிர்வாகி பீட்டர் மூர் (Peter Moore) கூறுகையில், அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால் பின்பற்ற வேண்டிய அவசர நடைமுறைகள் இங்கிலாந்திலுள்ள அனைத்து வானொலி நிலையங்களிலும் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்கும் என்றார்.
அந்த நடைமுறையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், மன்னரிடமும் அந்தச் செய்தியை கேட்ட பொதுமக்களிடமும் அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, இன்னும் பல ஆண்டுகள் மன்னரின் கிறிஸ்துமஸ் உரையை ஒலிபரப்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.