ஓடிவந்த பாதையெல்லாம் நீரற்று கிடக்கிறது
மழை துளி கண்டிரா கானகம் அதில்
செங்குருதி ஈரம் படிந்ததுவோ
வீழ்ந்திட்ட சருகின் வழியே மறைந்திட்ட
கந்தக துகள்கள் அறிவாயா
ஊறிய நஞ்சித் துகள்கள் உறுஞ்சிய
வேர்கள் இவை தானா
நரிகள் வென்று விட்ட தேசம் தனில்
கருகி போன கானகங்கள் அங்கே
திமில் ஏறிய வஞ்சகன் பிறப்பித்த
கற்புக்கள் அறிந்திடுமா என்
தேசத்தின் தாகம்
வஞ்சகன் தொப்புக்குள் கொடி
விழமுன் நெஞ்சில்
நஞ்சிக்கொடி புனைந்த மறவர்
நாமல்லவா
கானகம் உயிர்ப்பித்த
வேங்கைகள் அல்லவா
கொடும் ஊரார் படைகொண்டு
உறவழித்த பாவியல்லவோ
கருக்கொண்ட வானிடை வழியே
வெட்டிச்செல்லும் மின்னலாய்
தணலிடை களம் கண்ட
கரு வேங்கைகள் மீதேறி
கரு நாகங்கள் கொத்தி பிளந்த
தலைகள் இன்று உயிர்கொண்டு
எழுந்திடுமா?
–கேசுதன்