மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு மூன்று நாளில் தீர்வு.

மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது. அந்த வகையில் மூட்டு வலியை குணப்படுத்த இயற்கையில் உள்ள ஓரு அற்புத வழியைப் பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் – 1 கப்|
வரமிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வரமிளகாய் பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட் செய்யும் போது கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
பின் வலியுள்ள மூட்டுப் பகுதியில் இந்த பேஸ்ட்டை நன்றாக தடவி, 15 நிமிடம் கழித்து எரிச்சலை உணர்ந்தால், உடனே நீரில் கழுவி விடலாம்.
இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை என்று தொடர்ந்து 3 நாட்கள் பின்பற்றினால், மூட்டு வலி குணமாகிவிடும்.
மேலும் வரமிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், வலி நிவாரணி போன்று செயல்படுவதால், இது மூட்டு வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மிளகாயில் உள்ள கேப்சைசின் மூளைக்கு வலி சமிக்கையை அனுப்பி, குறிப்பிட்ட கெமிக்கல்களை அழித்து, வலியைக் குறைக்கிறது.
குறிப்பு
மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த வழியைப் பின்பற்றக் கூடாது. மேலும் காயங்கள் மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.

ஆசிரியர்