



துளசி இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் லிப்பிட்டுகளின் அளவை இயல்பாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்சியோலிடிக் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இத்தகைய துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது நெய் சேர்த்து கலந்து, அந்நீரைக் குடிப்பது இன்னமும் நல்லது.
பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. ஆய்வுகளிலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டையை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நெய் சேர்த்து கலந்து இறக்கி, குளிர வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் இருமடங்கு பலன் கிடைக்கும்.
பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் நல்ல சுவையாக இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தும், இதய ஆரோக்கியம் மேம்படும், சருமம் சுத்தமாகும், நல்ல லிப்பிட்டுகளின் அளவு மேம்படும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.