உருளைக்கிழங்கு தோலின் நன்மைகள்

உருளைக்கிழங்கு தோல் பல நோய்களை எதிர்த்துப் போராடும் திறன்களைக் கொண்டுள்ளன,

உருளைக்கிழங்கு தோலில் விட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற முகவராகவும் இது செயல்படுகின்றன. உருளைக்கிழங்கு தோல்களில் கால்சியம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.

உருளைக்கிழங்கு தோல்களில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. அவை சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. மேலும், அவற்றில் குளோரோஜெனிக் அமிலமும் உள்ளது. இது புற்றுநோய் வராமல் உங்களைப் பாதுகாக்கிறது

நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், பாலிஃபீனால்கள் மற்றும் கிளைகோல்கலாய்டுகள் ஆகியவை இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஆதலால், உருளைக்கிழங்கு தோலை உங்கள் உணவில் தவிர்க்காமல் சேர்க்கும்போது, உங்கள் இரத்த அழுத்த அளவு குறையும்.

உருளைக்கிழங்கு தோலில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சருமத்தில் உருளைக்கிழங்கு தோலைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை பாக்டீரியா எதிர்ப்பு, பீனாலிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கலவைகள் கொண்டவை. அவை லேசான ப்ளீச்சிங் செயல்பாட்டைச் செய்கின்றன. மேலும் கரும்புள்ளிகளை ஒளிரச் செய்கின்றன. இதனால், உங்கள் சருமம் பளபளப்பாக ஒளிர உதவுகிறது.

உருளைக்கிழங்கு தோலில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம் மற்றும் துத்தநாகம் உள்ளன. மேலும் இவை அனைத்தும் சேர்ந்து எலும்பின் அடர்த்தியை பராமரிக்கவும், பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

நிபுணர்களின் கூற்றுப்படி, உருளைக்கிழங்கு தோலை சாறு கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடிக்கு பளபளப்பை சேர்க்கிறது மற்றும் அவை வேகமாக வளர உதவுகிறது. இனிமேல், உங்கள் முடி பராமரிப்பில் உருளைக்கிழங்கு தோலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆசிரியர்