ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் சர்க்கரை மேல் எடுக்காதீர்கள்

ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரையை உட்கொள்ளலாம்? நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் சர்க்கரையை உட்கொள்வதால் எவ்வித தீங்கும் ஏற்படாது.

ஆனால் இதை விட அதிகமாக உட்கொண்டால், பிரச்சனையை சந்திக்கக்கூடும். அதிகளவு சர்க்கரையை ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமன், இதய நோய், அதிக கொலஸ்ட்ரால், அல்சைமர் நோய் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

நீங்கள் அதிகளவில் சர்க்கரையை உட்கொள்கிறீர்கள் அல்லது சர்க்கரை உங்கள் உடலை உருக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கு கடந்த சில நாட்களாக/வாரங்களாக தசை மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அதிகளவு சர்க்கரையை சாப்பிடுவது ஓர் காரணமாக இருக்கலாம். அதுமட்டுமின்றி, உடலில் அதிகளவு சர்க்கரை இருந்தால், அது ஆர்த்ரிடிஸ், கண் புரை, இதய நோய், ஞாபக மறதி போன்றவற்றை உண்டாக்கும்.

க்ளுக்கோஸ் தான் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. எனவே ஒருவர் இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம். பொதுவாக சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, கணையமானது இன்சுலினை வெளியிட்டு செல்களுக்கு க்ளுக்கோஸை கொண்டு வர உதவி புரிந்து, ஆற்றலை அளிக்கிறது. சர்க்கரை உணவுகளை உண்டு சிறிது நேரம் கழித்து, உங்கள் உடலில் ஆற்றல் குறைந்து சோர்வை உணர்ந்தால், உடல் அதிக சர்க்கரைக்கு அடிமையாகியுள்ளது என்று அர்த்தம்.

சரும பிரச்சனைகள் சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அது உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து, கிளைகேஷன் செயல்முறையை தொடங்குகிறது. இரத்த நாளங்களில் க்ளுக்கோஸ் அதிகமாக நுழையும் போத, அது வீக்கம் மற்றும் சரும நோய்களை உண்டாக்கும்.

ஏனெனில் அதிகப்படியான இன்சுலின் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் அழற்சி செயல்முறைகளை செயல்படுத்துகிறது.

உடல் பருமன் அதிகளவு சர்க்கரையை உண்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் பருமனால் அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, தினசரி செயல்பாடுகளை செய்ய முடியாமல் போகும்.

நீங்கள் சாக்லேட், கேக் பிரியராக இருந்தால், அதை அதிகம் உண்பதை இன்றே தவிர்த்திடுங்கள். பல் சொத்தை இனிப்பான உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது சொத்தை பல் மற்றும் பல் சிதைவை உண்டாக்கும். இருப்பினும், பற்கள் இப்படி பாழாவதற்கு சர்க்கரை காரணமல்ல, சாப்பிட்ட பின்னர் பற்களில் சிக்கியிருக்கும் உணவுகள் தான் காரணம்.

ஆகவே ஒருவர் பற்களை சரியாக துலக்காவிட்டால், பற்களில் சிக்கியுள்ள உணவுகள் பற்களில் ப்ளேக்குகளை உருவாக்கலாம். இது பற்களின் மேற்பரப்பை அழித்து, துளைகளை உண்டாக்கத் தொடங்குகிறது.

அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் அதிக சர்க்கரையை சாப்பிடுவது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். எப்படியெனில் நமக்கு வரும் காய்ச்சலை எதிர்த்துப் போராட வைட்டமின் சி தேவை. ஏனெனில் வைட்டமின் சி க்ளுக்கோஸ் போன்ற கெமிக்கல் அமைப்பைக் கொண்டுள்ளது.

எனவே சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணும் போது, நோயெதிர்ப்பு மண்டலமானது வைட்டமின் சிக்கு பதிலாக சக்தி எதுவும் இல்லாத க்ளுக்கோஸை எடுத்துக் கொள்கிறது. இதன் விளைவாக நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி காய்ச்சல், சளியால் அவதிப்படநேரிடுகிறது.

ஆசிரியர்