இறப்பை அழற்சி (gastritis )பற்றிய வைத்தியர் அறிவுரை

நமது உடலில் மூன்று விதமாக நோய்கள் பிரிக்கப்படுகின்றன, அவை வாதம், பித்தம், கபம் ஆகும் அதில் வாதம் சார்ந்த நோய் காற்றால் அதாவது வாயுவால் உருவாக்கப்படும்.

வாயு தொல்லையால் உருவெடுக்கும் பிரச்சனை இறப்பை அலர்ஜி (gastristis )
வாயுவால் இறப்பை சார் பகுதிகளில் ஏற்படும் நாள் பட்ட புண் வகைகள் 

இவற்றின் முதல் அறிகுறி ஏப்பம் காரம் ,புளிப்பாக வெளியேறும் , தொண்டை வலி  எந்த சளி தொல்லையும் உள்ளது தொண்டை வலி இருக்கும்.

இவ்வகை நோய் நிலைமை ஏற்பட முதல் எமது உணவு பழக்கவழக்கமே காரணம் அது உணவுகளை உரிய நேரத்தில் எடுக்காமை,இரண்டு மிகவும் காய்ந்த உணவுகளை எடுத்தல் ( நீரற்ற உணவுகள் ),மூன்று பாண் வகை உணவுகள் , நான்கு அசிட் வகை உணவு (மதுபான வகை ) முதலிடம் பெறும்,சமைக்காத உணவு , பயணம் செய்துகொண்டே உணவு எடுத்தல் ,போன் பாவித்து கொண்டே உணவை சாப்பிடுதழும் காரணம் ஆகும்.

அடுத்த காரணம் மனநிலை மன குழப்பம் ,இரவில் அதிக நேரம் முழித்திருத்தல் , தூக்கமின்மை போன்றன முக்கிய காரணமாக உள்ளது.

இந்த பிரச்சனை உள்ள நபர்கள் முற்றிலும்தவிர்க்கவேண்டிய உணவுகள் உளுந்து உருளை கிழங்கு கத்திரிக்காய் போன்ற காஸ் உற்பத்தியாக்கும் உணவுகளை தவிர்க்கலாம்.

எடுக்க வேண்டிய உணவுகள் நிறைய நீர் தன்மையான உணவுகளை உண்ணுதல் , பாசிப்பயறு மிக நன்மையானது பருப்புக்கு பதில் பயன்படுத்தலாம் பூண்டு ,சீரகம் உணவில் சேர்க்கலாம். .

இதை முற்றிலுமாக தவிர்க்க சீரகத்தை அவித்து இரண்டு வேளைக்கு  எடுத்து வர நல்ல பலன் கிடைக்கும். 

ஆசிரியர்