Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யூ டியூப் இற்கு எதிரான இணைய தளம்யூ டியூப் இற்கு எதிரான இணைய தளம்

யூ டியூப் இற்கு எதிரான இணைய தளம்யூ டியூப் இற்கு எதிரான இணைய தளம்

1 minutes read

unnamed (4)
உலகம் முழுவதும் சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வீடியோ வலைதளம் யூ டியூப். இது கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த வலைதளத்திற்கு போட்டியாக ஈரான் அரசு ‘மெஹ்ர்’ எனும் புதிய வீடியோ வலைதளத்தை உருவாக்கியுள்ளது. மெஹ்ர் என்றால் தமிழில் அன்பு என்று அர்த்தம்.அமெரிக்காவைக் சேர்ந்த நகோலா பாசிலி நகோலா எனும் இயக்குனர் முகமது நபிகளையும் முஸ்லிம் மக்களையும் இழிவுபடுத்தி திரைப்படம் ஒன்றை எடுத்தார். இதனை விளம்பரப்படுத்தும் நோக்கில் பாதிரியார் ஒருவர் யூ டியூப் வலைதளத்தில் வெளியிட்டார்.
இதனைப் பார்த்த உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த படத்தை யூ டியூப் வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு கூகுள் நிறுவனம் மறுத்தது. இதனையடுத்து அரபு நாடுகளில் யூ டியூப் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அரபு மக்களையும், பாரசீக மொழி பேசும் மக்களையும், ஈரான் நாட்டின் கலாச்சாரத்தையும் ஈர்க்கும் வகையில் ஈரானின் ஒளிபரப்புத்துறை இந்தப் புதிய வீடியோ வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More