இலங்கை அகதிகளின் கப்பல் நியூசிலாந்தை நோக்கி புறப்படுகிறதுஇலங்கை அகதிகளின் கப்பல் நியூசிலாந்தை நோக்கி புறப்படுகிறது

as3

இலங்கையில் இருந்து அகதிகளாக செல்பவர்களின் பார்வை தற்போது நியுசிலாந்தின் பால் சென்றிருப்பதாக த ஒஸ்ட்ரேலியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. பேருவளைப் பகுதியில் இருந்து நியுசிலாந்து செல்ல முற்பட்ட 75 பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்தே அந்த பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அகதிகள் தொடர்பான தமது சட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா அண்மையில் இறுக்கப்படுத்தி இருந்தது. இதனால் கடந்த ஐம்பது நாட்களில் அவுஸ்திரேலியாவுக்கு எந்த ஒரு அகதிப் படகும் சென்றிருக்கவில்லை. இது அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கடந்தவாரம் அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எபட் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலை என்பதை அறிந்த ஆட்கடத்தல் காரர்கள், தற்போது இலங்கையில் இருந்து அகதிகளை நியுசிலாந்து நோக்கி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் ஒரு கட்ட குழுவே நேற்று கைது செய்யப்பட்டிருந்ததாகவும், மேலும் பல நியுசிலாந்து நோக்கி பயணிக்கும் அகதிகள் கைது செய்யப்படலாம் அல்லது அவர்கள் நியுசிலாந்தை சென்றடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்