இலங்கையில் நான்கு மாதங்களில் 694 பேர் மரணம் இலங்கையில் நான்கு மாதங்களில் 694 பேர் மரணம்

இந்த வருடத்தில் கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 8390 விபத்துகளில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்துகளில் 637 வாகன விபத்துகளிலிலேயே பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸ்  புள்ளிவிபரங்கள்  தெரிவிக்கின்றன. இக் காலப் பகுதிக்குள் 1570 பாரிய வாகன விபத்துகளில் 2932 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியதுடன்  3251 விபத்துகளில் வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகின.

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் இடம்பெற்ற பாரிய 89 விபத்துகளில் மாத்திரம் 110 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்  தலைமைக்காரியாலயம் தெரிவிக்கின்றது.

ஆசிரியர்