April 1, 2023 6:45 pm

ஊழல் தரவரிசை | முதல் 100 நாடுகளுக்குள் இலங்கையும் ஊழல் தரவரிசை | முதல் 100 நாடுகளுக்குள் இலங்கையும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

corruptionwallpaper

இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடி வருவதாக 2013 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பீட்டு சுற்றாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்புடைய விடயங்களில்  ஊழல் சென்ற வருடம் நாற்பது புள்ளிகள் எடுத்து 79ஆவது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 37 புள்ளிகளை எடுத்து 91ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் முதல் 100 நாடுகளுக்குள் அடங்குகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசாங்கப் பிரதிநிதிகள் வசம் அதிகாரம் குவிந்துவருவதால், அரசியல் சாசன ரீதியாக ஆளும் கட்டமைப்பில் இருந்த வரம்புகளும் கட்டுப்பாடு அம்சங்களும் செயலற்றுப் போய்வருவதே  இதன் காரணம் என டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் சுற்றாய்வு கூறுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்