ரஜினிகாந்த், விஜய் க்கும் மோடி அழைப்பு | தமிழ் ரசிகர்களின் மனதை மதிப்பார்களா?ரஜினிகாந்த், விஜய் க்கும் மோடி அழைப்பு | தமிழ் ரசிகர்களின் மனதை மதிப்பார்களா?

 

குடியரசுத்தலைவர் மாளிகை மைதானத்தில் வரும் 26 ஆம் தேதி நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.

இந்த பிரம்மாண்ட விழாவில் இந்தியாவில் உள்ள தலைவர்கள் உட்பட  உலகின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் முன்னனி நட்சத்திரஙகள் அமிதாபச்சன், சல்மான்கான், அனுபம் கெர், பின்னணி பாடகி லாதா மங்கேஸ்கர், மற்றும் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உட்பட பல்வேறு திரை நட்சத்திரங்களுக்கு இந்த விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை அழைத்ததனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையில் தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ்நாடு முதல்வரும் கலந்துகொள்ளாத நிலையில் தமிழ் சினிமாவின் சுப்பர் ஸ்டார் மற்றும் இளைய தளபதி ஆகியோர் தமது ரசிகர்களின் விருப்புக்கு மதிப்பளித்து இவ் விழாவில் கலந்து கொள்ளாது தவிர்ப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆசிரியர்