இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடிஇந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில்  இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கபினட் அமைச்சர்களாக, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, உமாபாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம்விலாஸ் பஸ்வான், கல்ராஜ் மிஷ்ரா, மேனகா காந்தி, ஆனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அஷோக் கஜபதி ராஜு, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆனந்த் கீதே, சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கௌர் பாதல், நரேந்திர சிங் தோமர், ஜூயல் ஓரம், ராதா மோகன் சிங், தவர் சந்த் கெலோட், ஸ்மிர்தி இரானி, ஹர்ஷ வர்தன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆசிரியர்