கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்புகடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு

நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பள்ளி மாணவிகளை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

மாணவிகளை கண்டுபிடிப்பதற்கு, நைஜீரியாவுக்கு உதவும் வகையில் அமெரிக்கா தனது ராணுவத்தை அனுப்பியது. இரு நாட்டு ராணுவத்தினரும் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில், மாணவிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்து தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைவர்ம ஏர் மார்ஷல் அலெக்ஸ் பாடேஹ் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்