மோடியின் அமைச்சரவை | முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டவர் விவரம்மோடியின் அமைச்சரவை | முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டவர் விவரம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அணுசக்தி, விண்வெளி,பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு ஓய்வூதியம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை மோடி கவனிப்பார். கொள்கை ரீதியான முடிவுகளை பிரதமர் மோடி எடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,

தமிழக எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன் இணையமைச்சர் பதவியேற்கிறார். அவர் கனரக ஆலை, பொதுத் துறையை நிர்வகிப்பார்.

உள்துறை அமைச்சகம், ராஜ்நாத் சிங்குக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் கம்பெனிகள் அமைச்சகத்தை அருண் ஜேட்லி நிர்வகிப்பார்.

சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் துறையை அமைச்சராகிறார்.

நிதின் கட்காரிக்கு கப்பல் துறை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சதானந்த கவுடா ரயில்வே அமைச்சராகிறார்.

மோடியின் அமைச்சரவையில் நேற்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ஜெனரல் வி.கே.சிங், வடகிழக்கு மாநிலங்களுக்கான (இணையமைச்சர் தனிப் பொறுப்பு) அமைச்சகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மேலும், வெளிவிவகாரங்கள் துறை இணையமைச்சர் தனிப்பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முறைப்படி தனது பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்டார்.

மோடியின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை, வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஆகியவற்றைக் கவனிக்கும் பொறுப்பினைவெங்கய்ய நாயுடு ஏற்றுக் கொண்டார்.

ஆசிரியர்