December 7, 2023 3:15 am

தொடரும் பயங்கரவாதம் | நைஜீரியாவில் மற்றுமொரு தாக்குதலில் 33 பேர் பலிதொடரும் பயங்கரவாதம் | நைஜீரியாவில் மற்றுமொரு தாக்குதலில் 33 பேர் பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில், 33 பேர் பலியாகினர்.

யோப் மாகாணம் புனி யாடி என்னுமிடத்தில் உள்ள ராணுவ சோதனை சாவடி மற்றும் போலீஸ் நிலையத்தின் மீது புதன்கிழமை இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ராணுவ வீரர்கள் போன்று உடையணிந்து கொண்டு வாகனங்களில் வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 18 ராணுவத்தினரும், 15 போலீஸாரும் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீவைத்து விட்டு பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டனர்.

இந்தத் தாக்குதலை போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என நைஜீரிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்