ஆசிய பிராந்திய பாதுகாப்பு மாநாடு இன்று சிங்கப்பூரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஆசியாவின் பிராந்திய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்க ஜப்பான் முன் வருவதை ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆசிய பிராந்திய பாதுகாப்பில் சீனாவுக்கு நிகராக பங்கு வகிக்க ஜப்பான் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.