தி மு க வுக்கு குட்டுப்போடும் வைகோ | குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வர மாட்டேன்தி மு க வுக்கு குட்டுப்போடும் வைகோ | குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வர மாட்டேன்

Vaiko

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.

கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்களவைத் தேர்தலில் தோற்று விட்டதால் நான் வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. ஆகி நாடாளுமன்றம் செல்வேன் என்று கூறுகிறார்கள். அதை நான் விரும்பவில்லை என்று கூறினார்.

அப்போது மக்களவைத் தேர்தலில் தீவிர பிரசாரம் செய்த வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சிப் பதவி வழங்க வேண்டும் என சில பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

ஆனால் அதனை மறுத்த வைகோ, கட்சியில் துரை வையாபுரிக்கு எந்த பதவியும் வழங்க தேவை இல்லை. அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இல்லை. நான் போட்டியிட்டதால் மகன் என்ற முறையில் எனக்காக பிரசாரம் செய்தார். குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன் என பதிலளித்தார்.

ஆசிரியர்