யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று 21 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்புயாழ் பல்கலைக்கழகத்தில் இன்று 21 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று புதன்கிழமை 21 ஆம் திகதி  முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அனுஷ்டிப்பு நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட அனைவரும் கைகளில் தீபங்களை ஏந்தி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் அதிகளவில் இருந்த நிலையில் இந்த அனுஷ்டிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்கவிடாமல் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று 20 ஆம் திகதி வரை திடீர் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்