இந்தியாவில் தனியார் பண்பலை வானொலியில் செய்திகளுக்கு அனுமதி | மோடி அரசு துரிதமாக பரிசீலனைஇந்தியாவில் தனியார் பண்பலை வானொலியில் செய்திகளுக்கு அனுமதி | மோடி அரசு துரிதமாக பரிசீலனை

radio-station-5

நாடு முழுவதும் தனியார் பண்பலை வானொலியில் செய்திகளை ஒலிபரப்ப அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது தனியார் பண்பலை வானொலியில்  செய்திகளை ஒலிபரப்ப காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த காலத்தில் அனுமதி அளிக்கவில்லை.

தற்போது புதிதாக பதவியேற்றுள்ள மோடி தலைமையிலான அரசு  தனியார் பண்பலை வானொலியில் செய்திகளை ஒலிபரப்புவது குறித்து பரிசீலித்து வருகிறது.

விரைவில் இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

ஆசிரியர்