மலேஷியாவில் துயர சம்பவம் | 15 வயது சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்மலேஷியாவில் துயர சம்பவம் | 15 வயது சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்

கடத்திச் செல்லப்பட்ட15 வயது சிறுமியொருவர் 38 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மலேஷியாவில் இடம்பெற்றுள்ளது.

சிறுமியை கடத்திச் சென்ற ஒரு குழுவினர் வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மலேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,  இவர்களுள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரி ஆஸம் ஒதம் இது குறித்து கூறுகையில், “கிராம மக்கள் வாழும் பகுதிக்கு அருகாமையில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஏனையவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்