கூட்டமைப்பு – அரசு பேச்சுத் தொடர்பாக ஆராய தென் ஆபிரிக்காவின் விசேட பிரதிநிதி இம்மாத இறுதியில் இலங்கை வருகைகூட்டமைப்பு – அரசு பேச்சுத் தொடர்பாக ஆராய தென் ஆபிரிக்காவின் விசேட பிரதிநிதி இம்மாத இறுதியில் இலங்கை வருகை

இலங்கை விடயங்களைக் கையாளும் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில்ரமபோஷா இந்த மாத இறுதியிலேயே இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்களில் அனுசரணையாளராகப் பங்கெடுப்பது தொடர்பில் ஆராய் வதற்காகவே, விசேட பிரதிநிதி சிறில் ரமபோஷா இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ கடந்த நவம்பர் மாதம் தென்னா பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷீமாவிடம் விடுத்த வேண்டு கோளுக்கு அமைவாக, இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட பிரதிநிதியாக சிறில் ரமபோஷா நியமிக்கப்பட்டார்.

அவர் இலங்கை அரசு தரப்பைத் தென்னாபிரிக்காவுக்குக் கடந்த பெப்ரவரி மாதம் அழைத்துப் பேச்சு நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தென்னாபிரிக்காவுக்கு அழைத்துப்
பேசினார்.

இந்த நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் அவர் இலங்கைக்கு வருவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தென்னாபிரிக்கத் தேர்தல்கள் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது. இந்த மாத இறுதியில் அவர் இலங்கைக்குப் பயணம் செய்வார் என்று அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குப் பயணம் செய்யும் ரமபோஷா, வடக்கு கிழக்கு மாகாணங்களையும் நேரடியாகப் பார்வையிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்