இலங்கையில் காற்றுடன் கூடிய பலத்த மழை | 13 பேர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லைஇலங்கையில் காற்றுடன் கூடிய பலத்த மழை | 13 பேர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லை

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக  13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரைக் காணவில்லை என பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதினால் பல பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்