ஒபாமா ஐரோப்பிய சுற்றுப்பயணம் | பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு படையை அதிகரிக்க நிதி ஒதுக்கீடுஒபாமா ஐரோப்பிய சுற்றுப்பயணம் | பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு படையை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு

ewrfe

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல்கட்டமாக போலந்திற்கு சென்ற அவர் ஐரோப்பிய பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு படையை அதிகரிக்கா நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் போக்கை எதிர்க்கும் வகையில் செயல்பட்ட நேட்டோ நாடுகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா ஏதேனும் போர் நடவடிக்கையில் ஈடுபடுமானால் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக அந்நாட்டு தலைவர்களிடம்  ஒபாமா உறுதியளித்துள்ளதாக பி.பி.சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க- போலந்து போர்விமானிகளை சந்தித்து உரையாடிய ஒபாமா ஐரோப்பிய பயணத்தின் போது பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்