மோடியை சந்தித்த ஜெயலலிதா தனித் தமிழீழம் தொடர்பாக வலியுறுத்தியுள்ளார் : ஐ தே க எதிர்க்குமென அறிவிப்புமோடியை சந்தித்த ஜெயலலிதா தனித் தமிழீழம் தொடர்பாக வலியுறுத்தியுள்ளார் : ஐ தே க எதிர்க்குமென அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தனித் தமிழீழம் தொடர்பாக வலியுறுத்தியுள்ள நிலையில் எமது கட்சி இந்த நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.

இதேவேளை, இந்நாட்டில் கேளிக்கை விளையாட்டுக்களுடனான அரசாங்கமும் அமைச்சர்களுமே உள்ளனர். மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டு நாட்டின் இலவசக் கல்வி, சுகாதாரம் ஆகிவற்றை அரசு குழிதோண்டிப் புதைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

 

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

ஆசிரியர்