லண்டனில் சிறப்பாக நடைபெற்ற “சுயம்வரா” தெற்காசிய திருமண கண்காட்சி (படங்கள் இணைப்பு 1)லண்டனில் சிறப்பாக நடைபெற்ற “சுயம்வரா” தெற்காசிய திருமண கண்காட்சி (படங்கள் இணைப்பு 1)

இன்று லண்டனில் “சுயம்வரா” தெற்காசிய திருமண கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.  தெற்காசியாவின் திருமண ஆடை அலங்காரங்களுடன் பாஷன் ஷோ நடைபெற்றதுடன் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் தமது சேவையை காட்சிப்படுத்தியிருந்தன. 

தென்னிந்தியாவின் பிரபல சினிமா ஜோடி சினேகா மற்றும் பிரசன்னா இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதுடன். திருமண ஆடைகளுடன் பாஷன் ஷோ வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 

S24 மனேச்மனென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சிந்துஜா இன் நிகழ்வை திறம்பட ஒருங்கினைத்திருந்தமை புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களின் திறமையை வெளிப்படுத்தியிருந்தது. 

லண்டனில் உள்ள முன்னணி ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் இந்த பாஷன் ஷோ வில் பங்குபற்றின. 

மேலும் குட்டி ஹரியின் நகைச்சுவை நேரம் நிகழ்வை உற்சாகமாக ஆரம்பிக்க செய்தது. 

ரச்சேல் ராஜன் பாடல்கள் அரங்கத்தைக் கட்டிப்போட்டதுடன் முட்டு முட்டு பாடல் புகழ் டீ ஜே யும் ஒரு பாடல் பாடியிருந்தார். 

மேலைத்தேச நாடொன்றில் முதன்மை நகரான லண்டனில் தெற்காசிய திருமண கண்காட்சியில் பெருமளவான கண்காட்சியாளர்கள் பங்குபற்றியமையும் அவற்றுக்கு மக்கள் கொடுத்த ஆதரவினையும் பார்க்க முடிந்தது. கீழைதேச கலாச்சாரங்கள் இங்கேயும் முனைப்புப் பெறும் என்ற நம்பிக்கை எழச்செய்கின்றது. அவற்றை எமது அடுத்த தலைமுறை முன்னெடுப்பது எமக்கும் உற்சாகத்தை தருகின்றது. 

ஒழுங்கமைப்பாளர்களான  S24 மனேச்மனென்ட் நிறுவனத்துக்கு வணக்கம் லண்டன் பாராட்டுக்களை தெரிவிக்கின்றது. 

a3

a7 a5 a6 a4 a2 a1

ஆசிரியர்