மலேசிய கடலில்வெளிநாட்டவர்கள் பயணித்த படகு விபத்துமலேசிய கடலில்வெளிநாட்டவர்கள் பயணித்த படகு விபத்து

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் கடற்பகுதியில், இன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 97 வெளிநாட்டவர்கள் பயணித்த இந்த படகில் 31 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

மீதம் உள்ளவர்களை காணவில்லை என அந்நாட்டு ஊடக அறிக்கை  தெரிவித்துள்ளது. மேலும் கடற்படையினர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  “மலேசிய கடல் பகுதியில், காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ளது. இதனால் அலைகள் வலுவானதாக எழுவதால் விபத்துகள் இந்த வருடம் அதிக அளவில் ஏற்படுகிறது” என்று மலேசிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர்