நூதன தடை ரஷ்ய கால்பந்து அணியினருக்குநூதன தடை ரஷ்ய கால்பந்து அணியினருக்கு

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்றிருக்கும் ரஷ்ய கால்பந்து அணியினருக்கு அந்த அணியின் பயிற்சியாளர் பாபியோ கேப்லோ  நூதன தடை விதித்துள்ளார்.

உலகக்கிண்ணப் போட்டி முடியும் வரை பேஸ்புக்,  டுவிட்டர்,  இன்ஸ்டாகிராம் உட்பட எந்தவகையான ஒன் லைன் தொடர்பையும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதால் தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படும். இதனால் ஆட்டத்தின்மீதான கவனத்தில் சிதறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே ரஷ்ய அணி வீரர்கள் ஒரு மாத காலத்துக்கு தனது உத்தரவை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

ஆசிரியர்