இராக், சிரியா தீவிரவாதிகளால் பிரிட்டனுக்கு ஆபத்து டேவிட் கேமரூன் எச்சரிக்கைஇராக், சிரியா தீவிரவாதிகளால் பிரிட்டனுக்கு ஆபத்து டேவிட் கேமரூன் எச்சரிக்கை

பிரிட்டன் மீது இராக் மற்றும் சிரியா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவர் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் பங்கேற்றுப் பேசியதாவது:

இராக் மற்றும் சிரியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளால் பிரிட்டனுக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் நம்மைத் தாக்குவதற்கான சதி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆகவே பிரிட்டனில் உள்ள பாதுகாப்புத்துறை, உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மத்தியக் கிழக்கு பகுதிகளை கூர்ந்து கவனித்து வர வேண்டும் என்று தெரிவித்தார்.

லண்டனில் சீன பிரதமர் லீ கெகியாங்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் டேவிட் கேமரூன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிரியாவும் இராக்கும் பிரிட்டனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.

ஆசிரியர்