அடுத்த தலைமுறையை புகையில்லா தலைமுறையாக மாற்ற இங்கிலாந்தில் ஆய்வு அடுத்த தலைமுறையை புகையில்லா தலைமுறையாக மாற்ற இங்கிலாந்தில் ஆய்வு

இங்கிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்கு தினமும் சிகரெட் பிடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இந்த கணக்கீட்டின் முடிவில் 16 வயதுக்கும் குறைவான மாணவர்களில் குறைந்தது 600 பேராவது தினமும் சிகரெட் பிடிப்பது தெரியவந்தது. 3.7 மில்லியன் சிறுவர்களில் 11லிருந்து 15 வயதுக்குட்பட்டவர்கள் 463 பேர் தினமும் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதே அளவில் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து பகுதிகளில் 55, 30, 19 என்ற எண்ணிக்கையிலும் உள்ளனர். பர்மிங்ஹாமில் 74,000 சிறுவர்களில் 9 பேரும், லண்டனில் 4,58,000 சிறுவர்களில் 67 பேரும் இந்தப் பழக்கம் உடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே அடுத்த தலைமுறையினருக்கு புகையிலை விற்பனையைத் தடை செய்வது தொடர்பாக பிரிட்டனின் மருத்துவ சங்கத்தின் வருடாந்திர பிரதிநிதிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. புகை பிடிப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் இளம் வயதில் இந்தப் பழக்கத்தைத் துவங்குவதால் 2000க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலை விற்பனை தடை செய்யப்படவேண்டும் என்ற ஆலோசனை இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. இதன்மூலம் அடுத்த தலைமுறையை புகையில்லா தலைமுறையாக மாற்றமுடியும் என்று லண்டனின் பொது சுகாதார நிபுணர் டிம் குரோகர் புகு கூறினார்.

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் அறிவுக்கு எட்டாதவை என்று குறிப்பிட்ட அவர் 20ஆம் நூற்றாண்டில் 100 மில்லியன் மக்கள் புகையிலை தொடர்பான நோய்களால் இறந்துபோனதாகக் கூறினார். இவர்களில் மூன்றில் இருவர் இந்தப் பழக்கத்தை நிறுத்தியிருக்கலாம் என்றும், பத்தில் ஒன்பது பேர் இதனை ஆரம்பித்திருக்கவே வேண்டாம் என்றும் விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் உடனடியாக அனைத்து மக்களையும் தடுக்கமுடியும் என்பதைவிட சிகரெட் புகைக்கும் பழக்கம் சீராக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்று டிம் தெரிவித்தார்.

ஆசிரியர்