March 27, 2023 5:42 am

மிகப்பெரிய வைர நட்சத்திரம் விண்வெளியில்மிகப்பெரிய வைர நட்சத்திரம் விண்வெளியில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைரத்தை அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மிகவும் குளிர்ச்சியான வெளிப்படையாக தெரியும் வெள்ளை நிற சிறிய நட்சத்திரங்களை வானியல் ஆய்வாளர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது மிகவும் குளிர்ச்சியான மங்கலான ஒரு நட்சத்திரத்தை விஸ்கான்சின் மில்வாகி பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் கப்லான் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்ற நட்சத்திரங்களில் இருந்து இதன் தன்மை வேறுபட்டுள்ளது.

அதன் கார்பன் படிகமாகி அதன் விளைவாக பூமியை ஒத்த அளவில் ஒரு மிகப்பெரிய வைரமாக விண்வெளியில் மிதக்கிறது. அதன் வயது சுமார் 11 பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என கருதப்படுகிறது.

இதன் வெப்பநிலை 2700 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திரத்தில் இருந்து உடைந்து படிகமான இந்த மிகப்பெரிய நட்சத்திரம் முழுவதும் வைரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்