பிரித்தானியாவில் 16 மாத வயதான மகளை தனது காரால் இடித்துக் கொன்ற தந்தை பிரித்தானியாவில் 16 மாத வயதான மகளை தனது காரால் இடித்துக் கொன்ற தந்தை

தனது 16 மாத வயதான மகளை தந்தையொருவர் தனது காரால் தவறுதலாக இடித்து கொன்ற விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

மேற்கு யோர்ஷியரில் லீட்ஸ் எனும் இடத்திலுள்ள தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தனது காரை மேற்படி குழந்தையின் தந்தையான ஸ்கொட் பிட்ஸ் பின்னோக்கி செலுத்தி திரும்ப முயன்ற போதே அங்கு தத்தித் தத்தி நடந்து வந்த ஏஞ்சல் என்ற மேற்படி குழந்தையின் மீது கார் மோதியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஏஞ்சல் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தால் ஏஞ்சலின் பெற்றோரான ஸ்கொட்டும் மெஹினும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
நாளை வியாழக்கிழமை நடைபெறும் ஏஞ்சலின் மரணச்சடங்கில் கலந்து கொள்பவர்களை டிஸ்னிக் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களில் வரும் கதாபாத்திரங்களை போன்று வேடமிட்டு வர கோரப்பட்டுள்ளது.

ஆசிரியர்