பாகிஸ்தான் இந்தோனேஷியா இந்தியாவில் ஒரு மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை: ஐ.நா. அறிக்கைபாகிஸ்தான் இந்தோனேஷியா இந்தியாவில் ஒரு மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை: ஐ.நா. அறிக்கை

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தலா ஒரு மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக ஐ.நாவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் உலக அளவில் 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் தான் பெரும்பாலும் பள்ளிக்கு செல்லாமல் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அளித்துள்ள அறிக்கையின் படி இந்தியாவில் 1.4 மில்லியன் குழந்தைகள் 2011ம் ஆண்டில் பள்ளிக்கு செல்லவில்லை.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மற்ற 17 நாடுகளை ஒப்பிடும் போது பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாக இந்தியா குறைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டில் பாகிஸ்தானில் 5.4 மில்லியன் குழந்தைகளும்., இந்தோனேஷியாவில் 1.3 மில்லியன் குழந்தைகளும் பள்ளி செல்லவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்