ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து

ரஷ்யாவின் 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் பிராந்தியத்தில் தீயணைப்பு படை வீரர்கள் இன்று மிக்-8 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென சேகுண்டா கிராமத்தின் அருகில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மோசமான பராமரிப்பு காரணமாக அடிக்கடி விமான விபத்துக்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசிரியர்