வீட்டிலிருந்தே வேலை செய்ய இங்கிலாந்தில் ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் வீட்டிலிருந்தே வேலை செய்ய இங்கிலாந்தில் ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள்

இங்கிலாந்தில் இதுநாள்வரை பெற்றோர்களும், பிறரை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையைக் கொண்டிருந்தவர்களும் மட்டுமே தங்களது வேலை நேரங்களில் சிறப்பு சலுகைகளைப் பெற்று வந்தனர். இந்தத் தகுதி அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மில்லியன் ஊழியர்கள் தங்களின் வேலை நேரங்களில் சலுகைகளைப் பெற்றுவந்தனர்.

ஆனால் இன்றுமுதல் அங்கு நடைமுறைக்கு வந்துள்ள புதிய தளர்வாக்கப்பட்ட வேலை நேர விதிமுறைகளின்படி நாடு முழுவதிலும் உள்ள 20 மில்லியன் ஊழியர்கள் இத்தகைய சலுகைகளைப் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வது உட்பட பல வசதிகளைப் பெறமுடியும்.

இங்கிலாந்தின் வேலை உறவுகள் தொடர்பான அமைச்சர் ஜோ ஸ்வின்சன் இதுபற்றிக் கூறுகையில், இத்தகைய விதிமுறைகள் ஊழியர்களை மகிழ்ச்சியாக மாற்றுவதால் உற்பத்தித் திறன் உயர்ந்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று கூறினார்.

ஆசிரியர்