டயானாவின் சொத்து இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்குடயானாவின் சொத்து இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு

இங்கிலாந்து இளவரசர் ஹாரி. இவர் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா தம்பதியின் 2–வது மகன். இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார்.

இவருக்கு அவரது தாயார் டயானாவின் சொத்து விரைவில் கிடைக்க உள்ளது.

இளவரசர் சார்லசுக்கும், டயானாவுக்கும் இடையே விவாகரத்து ஆனது. அதற்காக டயானாவுக்கு சார்லஸ் கென்சிங்டன் அரண்மனை, நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பல சொத்துக்களை வழங்கினார்.

அவை டயானா எஸ்டேட் என்ற பெயரில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. டயானா மரணம் அடைந்து விட்டதால் சொத்துக்கள் அவரது 2 மகன்களுக்கும் அவர்களது 30–வது வயதில் சென்றடையும் வகையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.

அதன்படி இளவரசர் வில்லியமுக்கு ஏற்கனவே  சொத்துக்கள் வழங்கப்பட்டு விட்டன. தற்போது இளவரசர் ஹாரிக்கு 30 வயது பிறக்க உள்ளது. அதைத் தொடர்ந்து இவருக்கு  சொத்துக்களை கென்சிங்டன் அரண்மனை வழங்குகிறது

ஆசிரியர்