இந்தோனேசியா முன்னாள் நீதிபதிக்கு ஆயுள் சிறைஇந்தோனேசியா முன்னாள் நீதிபதிக்கு ஆயுள் சிறை

இந்தோனேசியாவில், தேர்தல் வழக்குகளில் தீர்ப்பை மாற்றுவதற்காக 50 லட்சம் டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், அரசியலமைப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:

குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நீதிபதி அகில் முக்தார், பிராந்திய தேர்தல் வழக்குகள் தொடர்பாக இதுவரை மொத்தம் 54 லட்சம் டாலர்  லஞ்சமாகப் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு தொழிலதிபர் மற்றும் அமைச்சர் ஆகியோரிடம் இருந்து 2.50 லட்சம் டாலர்  லஞ்சம் பெற்றதற்காக ஊழல் தடுப்பு அதிகாரிகளால் அகில் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியர்