அமெரிக்காவில்1931ஆம் ஆண்டு அஞ்சல் மூலம் அனுப்பிய கடிதம்அமெரிக்காவில்1931ஆம் ஆண்டு அஞ்சல் மூலம் அனுப்பிய கடிதம்

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது தாயாருக்கு கடந்த 1931ஆம் ஆண்டு அஞ்சல் மூலம் அனுப்பிய கடிதம், 83 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சென்றடைந்தது.

அமெரிக்காவின் மெயின் மாகாணத்தில் இருந்து, பிட்டிஸ்ஃபீல்டு மாகாணத்தில் உள்ள தனது தாயாருக்கு மிரியம் மெக்மைக்கேல் என்ற ஆசிரியை அக்கடிதத்தை எழுதியிருந்தார்.

இக்கடிதத்தை எழுதிய மிரியம் மெக்மைக்கேலும், அவரது தாயாரும் தற்போது உயிருடன் இல்லை.

இது குறித்து, தற்போது அக்கடிதத்தைப் பெற்றுள்ள ஆசிரியையின் சகோதரர் மகள் கூறுகையில், “கடிதம் எழுத நீண்ட காலம் கழித்து கடிதம் எழுதியதற்கு மன்னிக்கவும்’ என தனது அத்தை அக்கடிதத்தில் எழுதியுள்ளதாகக் கூறினார்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தபால் நிலைய ஊழியர் கூறுகையில், “83 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் எப்படி தற்போது வந்து சேர்ந்தது என்பதை யூகிக்க முடிவில்லை.

தபால் நிலையத்துக்கு வந்த கடிதங்களைப் பிரித்தபோது, அக்கடிதத்தைப் பார்த்தேன்.

அதில், பழைய காலத்தைச் சேர்ந்த 2 சென்ட் அஞ்சல் தலை ஒன்று ஒட்டப்பட்டிருந்தது’ என்றார்.

ஆசிரியர்