இந்திய நர்சுகள் 46 பேர் நாளை இந்திய புறப்படுகிறார்கள் இந்திய நர்சுகள் 46 பேர் நாளை இந்திய புறப்படுகிறார்கள்

பல நாட்களாக ஈராக் கிளர்ச்சியாளர்கள் மத்தியில் , சிக்கி தவித்த இந்திய நர்சுகள் 46 பேர் விடுவிக்கப்பட்டதாக திக்ரித் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்தது. விடுவிக்கப்பட்ட நர்சுகள் ஏர்பில் நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இங்கு ராணுவத்தினரிடம் நர்சுகள் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இன்று முழுவதும் எர்பில் நகரில் தங்கியிருந்து நாளை இந்தியா புறப்படுவர் என தெரிகிறது.

நேற்று திக்ரித் நகரில் இருந்து மொகசூல் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்திய, ஈராக் தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் நர்சுகள் விடுதலையானதை உறுதி செய்தார். நர்சுகளுடன் போனில் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்