எண்ணெய் லாரிகளுக்கு தலிபான்கள் தீ வைப்புஎண்ணெய் லாரிகளுக்கு தலிபான்கள் தீ வைப்பு

ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர் லாரிகளுக்கு தலிபான் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு தீ வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஹஸ்மத் ஸ்டேனிக்ஸôய் கூறுகையில், “காபூல் நகருக்குள் செல்வதற்காக, நகருக்கு வெளியே சாவ்க்-இ-அர்கான்டி என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு அந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது, அந்த லாரிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி வெடிக்கச் செய்து தீப்பற்ற வைத்தனர்’ என்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காந்த வகை வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த லாரிகள் ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்றும் காவல்துறை புலனாய்வு அதிகாரி தெரிவித்தார்.

ஆசிரியர்