63 பெண்கள்-சிறுமிகள் நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பினர்63 பெண்கள்-சிறுமிகள் நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பினர்

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14–ந் தேதி போர்னோ மாகாணத்தில் கிபக் நகரில் 200 பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர்.

அவர்களை விடுவிக்க தங்களது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை விடுதலை செய்ய நிபந்தனை விதித்தனர். ஆனால் அதை ஏற்க அரசு மறுத்துவிட்டது. எனவே கடத்தப்பட்டு 23 நாட்களாகியும் மாணவிகள் தீவிரவாதிகள் பிடியிலேயே உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் போர்னோ மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள தம்போவா நகரம் அருகே கிராமங்களில் புகுந்த தீவிரவாதிகள் மீண்டும் 68 பேரை கடத்தி சென்று விட்டனர். அவர்களில் பெண்களும், சிறுமிகளும் அடங்குவர்.

அவர்களை மீட்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற் கொண்டது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை தம்போவா அருகேயுள்ள ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, இத்தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் அனைவரும் சென்ற போது அவர்கள் பிடியில் இருந்து 63 பெண்கள் மற்றும் சிறுமிகள் தப்பி விட்டனர்.

இந்த தகவலை ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்